ஓபிஎஸ் மகன் வென்றால் அரசியலுக்கு முழுக்கு: ஆர்.பி.உதயகுமார் சவால்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (16:13 IST)
ஓபிஎஸ் மகன் தனது பாராளுமன்ற எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் நான் அரசியலுக்கு முழுக்கு போட்டு விடுகிறேன் என ஆர் பி உதயகுமார் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் ஒரே ஒரு எம்பி மட்டுமே வெற்றி பெற்று இருந்தார் என்பதும் அவர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆர்வி உதயகுமார் ஆவேசமாக கருத்தை தெரிவித்துள்ளார் 
 
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தான் அரசியலுக்கு முழுக்கு போட்டு விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்