மக்களே… வரும் ஏப்ரல் 1 முதல் 15 வரை.. ரேசன் கார்டுக்கு ரூ.1000 : தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (20:21 IST)
மக்களே… வரும் ஏப்ரல் 1 முதல் 15 வரை.. ரேசன் கார்டுக்கு ரூ.1000 : தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பல், இந்தியா முழுவதிலுமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதனால் மக்களுக்கு கட்டாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டிய நிலையில் உள்ளது, அந்தக் கடமையை மத்திய அரசும், மாநில அரசும் பொறுப்புடன் ஆற்றி வருகின்றனர். அதேபோல் பல  தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும், விளையாட்டு, சினிமா நட்சத்திரங்கள்,  அரசியல் பிரமுகர்கள்,  தொழிலதிபர்கள் மக்களுகு சேவை யாற்றியும், நிதிஉதவி செய்தும் வருகின்றனர்.

இதே நிலைதான் தமிழ்நாட்டிலும் நீடிக்கின்றது. இந்நிலையில் தமிழக அரசு மக்களின் நிலைமையை அறிந்து செயலாற்றி வருகின்றனர். பல திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு மக்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்த நிலையில்  கொரோனா எதிரொலியாக வரும் மாதம்  ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் என  கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

மேலும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 பயணச்செலவுக்காக வழங்க வேண்டும்,  ஊழியர்களுக்கு தேவையான மாஸ்க், கிருமிநாசினிகளை வழங்க வேண்டும்  என தமிழக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்