சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாநில அரசுகளின் உத்தரவையும், கொரோனா என்ற கொடூர வைரஸின் பாதிப்பையும் உணராமல் அனைவரும் விடுமுறை கிடைத்துள்ளதாக நினைத்து பலரும் வெளியில் சென்று நடமாடுகின்றனர். இதனால், போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
அதில், எனது அம்மா டாக்டராக இருக்கிறார். தற்போது அவர் உங்களுக்கு உதவுவதற்காக என்னைவிட்டு விலகி இருக்கிறார். நீங்கள் அவருக்கு உதவுவதற்காக தயவு செய்து வீட்டில் இருக்கலாமே? என்ற உருக்கமான வாசகத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ள சிறுவன். இது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.