உடலை பெறப் போவதில்லை: ராம்குமார் தாயார் கண்ணீர் பேட்டி

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (13:21 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மின்வயரை வாயால் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.



இந்நிலையில் ராம்குமாரின் தாயார் தன் மகள்கள் மற்றும் உறவினர்களுடன் இன்று காலை செங்கோட்டை பண்பொழி சாலையில் தன் மகள்கள் மற்றும் உறவினர்களோடு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், என் மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. நேற்றுக்கூட எங்கள் வழக்கறிஞர் என் மகனை சந்தித்துள்ளார். அப்போதுகூட அவன் நல்ல விதமாக பேசியிருக்கிறான். இதனால் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பதை நம்புவதற்கு இல்லை. இந்த வழக்கை சி.பி.ஐ. எடுக்கும் வரை நாங்கள் ராம்குமாரின் உடலை பெறப் போவதில்லை என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்