தெருக்கூத்து பாத்து ரொம்ப நாள் ஆச்சு! – சசிக்கலா வருகையை கலாய்க்கும் ராமதாஸ்??

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:22 IST)
பெங்களூரிலிருந்து சசிக்கலா சென்னை வந்தடைந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபின் நேற்று பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். வரும் வழியில் அவருக்கு ஏராளமான அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

பெங்களூரில் தொடங்கிய பயணம் 23 மணி நேரம் தொடர்ந்த நிலையில் இடையிடையே கார்கள் மாறியும் சசிக்கலா பயணித்து சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “’தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு” என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது” என்று கூறியுள்ளார். அவர் சசிக்கலாவின் வருகை குறித்துதான் அவ்வாறு பேசியுள்ளதாக அமமுகவினர் அவரது ட்வீட்டில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்