ராமர் கோயில் குடமுழுக்கிற்காக இலங்கையிலிருந்து மதுரை கொண்டுவரப்பட்ட ராமர் பாதம்

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (18:51 IST)
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
 
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அப்பகுதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக தனியாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு நிதி சேகரிக்கபட்டு கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கட்டுமான பணிகள் முடிந்து ஜனவரியில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
 
இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த    நிலையில்,  அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள  ராமர் கோயில் குடமுழுக்கிற்காக இலங்கை நாட்டிலிருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்ட ராமர் பாதம் மீனாட்சி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
 
இந்த ராமர் பாதம் ராம ராஜ் யுவா யாத்திரையின் மூலம் நாளை ராமேஸ்வரத்தில் துவங்கி 8  மா நிலங்கள் வழியாக அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்