நீங்க வேணாம்னாலும் நாங்க விட மாட்டோம்! – ரஜினி வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (12:11 IST)
நடிகர் ரஜினி உடல்நல குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்குவது தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் ரஜினி வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி வெளியிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவியது. அதில் ரஜினி தனக்கு ஏற்கனவே இரண்டு முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கொரோனா உள்ள நிலையில் கட்சி தொடங்குதல், பொதுக்கூட்டம் என சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தனக்கு மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் தன்னால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என கூறியிருப்பதாக உள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் விளக்கமளித்த ரஜினி தனது பெயரில் வரும் அறிக்கை தான் எழுதியது இல்லை என்றும், ஆனால் உடல்நலம் குறித்த தகவல்கள் உண்மை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள், ட்விட்டர் ட்ரெண்டிங்குகளை அவரது ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது “இப்போ இல்லைனா எப்போதுமே இல்ல” என்ற வாசகம் அடங்கிய டீ சர்ட்டுகளை அணிந்து ரஜினி ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்