இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஒரு ஆண்டு மட்டுமே இலவச பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. நீட் இலவச பயிற்சியை இரண்டு ஆண்டுகளாவது நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள். பெற்றோர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், மாணவர்கள் விரும்பினால் இரண்டாவது ஆண்டும் நீட் பயிற்சியை இலவசமாக அரசு பயிற்சி மையங்களில் மேற்கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.