தயவுசெய்து கட்சி ஆரம்பிக்காதீர்கள்: ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (08:37 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பணியை தொடங்கி, அந்த பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். இருப்பினும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே ஒருசில அரசியல்வாதிகளும், அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 'ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். ஒருவேளை கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால், தயவுசெய்து கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுவேன்' என்று கூறினார்.

மேலும் 'மோடிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற உண்மையை கண்டுபிடித்த தமிழிசைக்குத்தான் நோபல் பரிசு முதலில் தர வேண்டும். காங்கிரஸ்-திமுக கூட்டணியில் கமல் சேர்வது ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி கையில்தான் உள்ளது. கூட்டணிக்கு முன்னரே திமுக இல்லாத கூட்டணியில்தான் சேருவேன் என்று கமல் கூறியது சரியல்ல' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது பேட்டியில் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்