ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை ஒரு நாள் இந்தியாவில் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.