ஜூலை மாதம் அரசியலில் இறங்கும் ரஜினி ; உறுதி செய்த சத்யநாரயணா

Webdunia
சனி, 27 மே 2017 (11:48 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி வருகிற ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் சகோதரர் சத்யநாரயணா தெரிவித்துள்ளார்.


 

 
ரஜினிகாந்தின் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார்.
 
எனவே, அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கர்நாடகாவில் வசிக்கும் ரஜினியின் அண்ணன் சத்யநாரயணா, செய்தியளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். ஊழலை அகற்றவே ரஜினி அரசியலுக்கு வர  விரும்புகிறார். இதுதான் மக்களின் விருப்பமும் கூட. இதுகுறித்து அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். அனைவருமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார்” என கூறினார்.
 
இதன் மூலம், ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதில் உறுதியாகியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்