நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டசபையில் வைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தமிழக சட்டசபையில் வைக்க இருப்பதாகவும், அதனை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இளங்கோவன், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் வைப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
மேலும் ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைத்தால் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் படத்தை ஐஜி அலுவலகத்தில் வைப்போம் என்றார் அதிரடியாக.