மவுன அஞ்சலிக்கு பின் காலா திரைப்படம் - தூத்துக்குடியில் விநோதம்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (09:59 IST)
தூத்துக்குடியில் மௌன அஞ்சலிக்கு பின் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல தியேட்டர்களில் அதிகால 5.30 மற்றும் 6.30 மணியளவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதைக்காண ரஜினி ரசிகர்கள் குவிந்திருந்தனர். மேலும், படம் நன்றாக இருப்பதாகவும் இணைய தளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களுக்கு ரசிகர்கள் மௌன அஞ்சலி செலுத்திய பின்பே படம் திரையிடப்பட்டது. 
 
வழக்கமாக ரஜினி படம் எனில் ரசிகர்கள் பட்டாசு, மேள தாளங்கள் என கொண்டாட்டங்களுடன், விசில் அடித்து முதல் காட்சியை பார்ப்பது வழக்கம். ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்ததால், தூத்துக்குடியில் காலா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாக,  தியேட்டர்களில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தி விட்டு  காலா படத்தை பார்த்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்