ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக பணி செய்து வருகிறது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆம்ஸ்ட்ராங் மனைவியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முதலில் 11 நபர்களும் அதன்பின் அதிமுக, திமுக, பாஜக உட்பட சில கட்சிகளின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஆம்ஸ்ட்ராங் மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். ஆம்ஸ்ட்ராங் மனைவி காவல்துறை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றும் சரியான அணுகுமுறையில் காவல்துறை செயல்படுவதாகவும், உண்மையான குற்றவாளிகளை தான் கைது செய்திருக்கிறார்கள் என்றும் என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார்,
தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானது என்றும் ஆட்சி மாறினாலும் காவல்துறையினர் சரியாக பணி செய்வார்கள் என்றும் அவர்களுக்கும் ஒரு மனசாட்சி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திருமதி ஆம்ஸ்ட்ராங் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தமிழக காவல்துறையின் பணியை பாராட்டினார்கள் என்றும் காவல்துறை இந்த வழக்கில் சரியான வழியில் செல்கிறது என்றுதான் என்னுடைய மனதிற்கு தோன்றுகிறது என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.