அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று தீர்ப்பு!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (07:34 IST)
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளிக்க இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2014ஆம் ஆண்டு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியதாகவும் ஆனால் அதன் உண்மையான மதிப்பு 6 கோடி என்றும் அதே போல் குறைந்த விலையில் வீட்டு மனை மற்றும் நிலம் வாங்கியதாகவும் அதன் மதிப்பு சந்தை நிலவரப்படி ஒரு கோடி என்றும் குறிப்பிட்டிருந்தது
 
இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறவில்லை. இதனை அடுத்து மகேந்திரன் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது 
 
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜி மீதான இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய அனைவரும் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்