திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தாது மணல் வியாபாரம் செய்யும் பிரமுகர் வைகுண்டராஜன். இவர் தனது கனிம பிளாண்ட் ஒன்றுக்கு தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறை துணை இயக்குநர் நீரஜ் கத்ரி என்பவருக்கு 4.13 லட்சம் லஞ்சமாகக் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 3 ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக பிப்ரவரி 1 ஆம் தேதி தீர்ப்பு வெளியானது.
இந்நிலையில் நேற்று குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்கப்பட்டது. அதில் முதல் குற்றவாளியான சுற்றுச்சூழல் அதிகாரி நீரஜ் கத்ரிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளி வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.