சென்னையின் முக்கிய பகுதிகளில் சற்று முன் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு காற்று திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்று சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் சற்றுமுன் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது
சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலை உள்பட பல பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.