சென்னையின் பல பகுதிகளில் பரவலான மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Mahendran
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (09:43 IST)
சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை உள்பட  19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  

சென்னை மற்றும் என்று சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை மெரினா கடற்கரை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும் குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

அதேபோல் சென்னையில் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. காலை முதலே சென்னையில் மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்