இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில், Adidas நிறுவனம் சீனாவுக்கு வெளியே தமிழகத்தில் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு: ஒசூரில் டாடா நிறுவனம் ரூ.7,000 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டு, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது.
எனவே, எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தென்மாவட்டத்தில் ரூ.16,000 கோடியை முதலீடு செய்துள்ளது.
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.
இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!
தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!