தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (13:44 IST)
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்த 17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்