அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரெய்டு நிறைவு: என்னென்ன சிக்கியது??

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (08:03 IST)
அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரூ.11.8 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை 5 மணியளவுல் சோதனை செய்ய துவங்கினர். இந்த சோதனை இன்று கலை 6.30 மணியளவில் நிறைவு பெற்ற நிலையில் முக்கிய ஆவணங்களும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரூ.11.8 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும்  ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பிரமுகர் வெற்றிவேல் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு உதவியாளராக இருந்ததாகவும் அதுமட்டுமின்றி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விவகாரத்தில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்