அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (21:46 IST)
அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த சில மணி நேரங்களாக திடீரென சோதனை செய்து வருகின்றனர்
 
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வெற்றிவேல் உதவியாளராக இருந்ததாகவும் அதுமட்டுமின்றி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விவகாரத்தில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
 
வெற்றிவேல் வீட்டில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் சோதனை முடிந்தது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்