ராதிகாவின் கோகோ-கோலா விளம்பர சர்ச்சை: டுவிட்டரில் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (12:07 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் வெளிநட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என தமிழக வியாபாரிகள் அறிவித்தனர்.


 
 
இதனால் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக பாதித்தது. இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் நடிகை ராதிகா நடித்த கோகோ-கோலா விளம்பரம் ஒன்று வைரலாக பரவியது.
 
வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யமாட்டோம் என தமிழக வியாபாரிகள் முடிவெடுத்திருக்கும் வேளையில், ராதிகாவின் விளம்பர படத்தை பார்த்த சிலர், அது தற்போது எடுக்கப்பட்ட விளம்பரம் என நினைத்து அவரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அது 2005-இல் எடுக்கப்பட்ட விளம்பரம், யாரோ அந்த விளம்பரத்தை அவரை கேலி செய்யுமாறு மாற்றி வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

 
இந்நிலையில் அந்த விளம்பரம் குறித்து நடிகை ராதிகா தந்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அது 2005-இல் எடுக்கப்பட்ட விளம்பரம், அதன் ஹிந்தி வடிவத்தில் அமீர்கான் நடித்திருப்பார். அது குறித்து இப்போது பேசுவது மன சிக்கலை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்