இலங்கையில் கரை கடந்த பின் தமிழகத்திற்கு வரும் புரெவி புயல்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (07:40 IST)
இலங்கையில் கரை கடந்த பின் தமிழகத்திற்கு வரும் புரெவி புயல்!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் இலங்கையை கரை கடந்த பின் தமிழகத்துக்கு வரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 
 
இலங்கையின் மட்டக்களப்பு மற்றும் பருத்தித்துறை இடையே இன்று மாலை அல்லது இரவில் புரெவி புயல் கரையை கடக்கும் என்றும் அதன் பிறகு இலங்கையை கரையை கடந்த பின்னர் தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடாவுக்கு புரெவி புயல் நுழைய இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன 
 
தமிழகத்தில் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை புரெவி புயல் கரையை கடக்கிறது என்றும் எனவே அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த புயல் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நடந்து வருவதாகவும் இந்த புயல் காரணமாக தென்காசி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்