என்ன நீக்குன மாதிரி சண்முகத்தை நீக்குவாங்களா? – அதிமுகவுக்கு புகழேந்தி கேள்வி!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (10:19 IST)
பாஜக கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சி.வி.சண்முகத்தை கட்சியிலிருந்து நீக்குவார்களா என புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணியே காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பாஜக – அதிமுக பிரமுகர்களிடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை விடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி “அன்று பாமக குறித்து நான் பேசியதற்காக என்னை அதிமுகவிலிருந்து நீக்கினார்கள். இன்று பாஜகவுக்கு எதிராக பேசிய சி.வி.சண்முகத்தை கட்சியிலிருந்து நீக்குவார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்