மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சர்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாஹேப், ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் தங்களில் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவராக உள்ள எல்.முருகன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் இந்தத் தகவல் உறுதியானது.
இந்நிலையில், எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை, மற்றும் பால்வளத்துறை , தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ம பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது, கிரிராஜ் சிங்கிற்கு ஊரக வளர்ச்சியும், பஞ்சாயத்துராஜ் பசு பசுபதி குமர் பாரஸிற்கு உணவுப் பதப்புடுத்துதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.