மணிமுத்தாறு அருவியில் பொதுமக்களுக்கு தடை!

Webdunia
வியாழன், 19 மே 2022 (12:57 IST)
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. பொதுவாக கோடைக்காலங்களில் மக்கள் மலைவாச ஸ்தலங்கள் மற்றும் அருவிகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் சுற்றுலா தளமான மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஒகேனக்கலுக்கு அருவியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் பலர் செல்வது அதிகரித்துள்ளது.
 
ஆனால் அதேசமயம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், படகு சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்