அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை: வனத்துறை
வியாழன், 13 ஜனவரி 2022 (10:29 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு நாட்களுக்கு தடை என வனத்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று கிட்டத்தட்ட 18,000 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதி விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தர வாய்ப்பு இருப்பதால் அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை என வனத்துறை அறிவித்துள்ளது
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும், எனவே சுற்றுலா பயணிகள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளது.