100% இருக்கைகள் விவகாரம்: அமைச்சர் அமித்ஷாவுக்கு தயாரிப்பாளர் தாணு எழுதிய கடிதம்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (18:28 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபகாலமாகத்தான் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திரையுலகினர் மற்றும் விஜய் உள்பட பல முக்கிய பிரபலங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டது 
 
ஆனால் தற்போது மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் கண்டனங்களை அடுத்து இந்த அரசாணை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறும் நிலையை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிலிம் பெடரேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவரான தலைவரும் தயாரிப்பாளருமான எஸ் தாணு அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு லட்டர் ஒன்றை எழுதியுள்ளார் 
 
அந்த லட்டரில் திரையரங்குகளில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் பொங்கல் பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களிலாவது 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது











 
 








 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்