புரோ கபடி லீக்கில் விளையாடும் தமிழக வீரர் தற்கொலை.. அதிர்ச்சியில் பெற்றோர்..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (17:56 IST)
ப்ரோ கபடி லீக் போட்டியில் விளையாடும் தமிழக வீரர் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் கபடி அணி வீரர்களில் ஒருவர்  அருணாச்சலம். இவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் இவர் திடீரென குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சி மருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

தற்கொலைக்கு முன் அவர் பதிவு செய்த வீடியோவை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது மனைவி வேறொருவரிடம் பேசி வந்ததாகவும் மாமனார் தொழில் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் அந்த வீடியோவில் அருணாச்சலம் உருக்கமாக பேசி உள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ப்ரோ கபடி போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் அதில் விளையாடும் வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்