தமிழக தேர்தல் பிரசாரம் பிரியங்கா காந்தி வருகை

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (02:11 IST)
தமிழகத்தில் தேர்தல் பிராசரம் செய்ய பிரியங்கா காந்தி வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
தமிழகத்தில், சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.
 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், ராஜேஷ் பைலட் ஆகியோர் வருகின்றனர்.
 
மேலும், தமிழகத்தில் தேர்தல் பிராசரம் செய்ய பிரியங்கா காந்தி வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
அடுத்த கட்டுரையில்