தனியார் பால் விலைகளும் உயர்வு – லிட்டருக்கு 60 ரூபாய் !

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (08:57 IST)
ஆவின் பால் விலையை அடுத்து இப்போது தனியார் நிறுவன பால் விலையும் உயர்ந்துள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதேசமயம் பால் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை 4 ரூபாய் உயர்த்தியும், எருமை பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விற்பனை விலையை 6 ரூபாய் அதிகப்படுத்தி இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் ஆவின் பால் உயர்வை அடுத்து இப்போது தனியார் நிறுவனங்களும் தங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. தமிழகத்தில் பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஹட்சன் நிறுவனம் இன்று முதல் தங்கள் பால் விலையை 4 ரூபாய் உயர்த்துவதாகப் பால் முகவர்களுக்குச் சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு 60 ரூபாய் என்ற அதிகபட்ச விலையை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்