மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்துள்ளது.இ ந் நிலையில், மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.
இதில், இந்தியாவில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றி அவர் கேட்டுள்ளதாத் தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பள்ளிகளுக்குக் குழந்தைகள் நேரடியாகச் சென்று படிப்பது சிறந்தது. இன்றைய குழந்தைகளிடம் தொழில் நுட்பத்தை வலிய திணிக்ககூடாது என்றும், தேசியக் கல்விக்கொள்கையில் தாய்மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று, விவசாயிகள் பற்றி படிக்கும்போது, உள்ளூரைச் சேர்ந்த விவசாயிகள் அனுபவம் மாணவர்களுக்கு நேரடியாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.