”சுபஸ்ரீ இறக்கவேண்டும் என்பது விதி”.. அதிமுகவுக்கு முட்டு கொடுக்கும் பிரேமலதா

Arun Prasath
திங்கள், 23 செப்டம்பர் 2019 (13:05 IST)
சுபஸ்ரீ எதிர்பாராத விபத்தில் இறந்ததை எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உழுக்கியது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.

மேலும் எதிர்கட்சியினர் இதனை வன்மையாக கண்டித்தும் வந்தனர், இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”சுபஸ்ரீ உயிரிழப்பு எதிர்பாராத நிகழ்வு, சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் லாரி வந்ததும் விதியே. அதிமுக பேனர் என்பதால், எதிர்கட்சிகள் இந்த விபத்தை பெரிதுபடுத்துகின்றனர்.

சுபஸ்ரீ உயிரிழந்ததை குறித்து தமிழகத்தை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சுபஸ்ரீ உயிரிழந்தது விதி என்று பிரேமலதா கூறியதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்