பிரபாகரன் - சீமான் எடிட் புகைப்படம்.. அம்பலப்படுத்திய சங்ககிரி ராஜ்குமாருக்கு மிரட்டல்?

Mahendran
வெள்ளி, 24 ஜனவரி 2025 (14:14 IST)
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்றும் அந்த புகைப்படத்தை வெட்டி ஒட்டி எடிட் செய்ததே நான் தான் என்றும் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு மிரட்டல் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் ’கடந்த நான்கு நாட்களாக எனக்கு தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமும் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருப்பதாகவும் அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுவதாகவும் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அதற்காக அச்சப்பட்டு கொண்டுதான் இருக்கப்போவதில்லை என்றும் கசப்பு சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசி விட்டு போங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நீ எந்த ஊர் என்று என்னிடம் கேள்வி கேட்டு சிரிப்பு காட்டுகிறார்கள் என்றும் உங்கள் அச்சுறுத்தலுக்கு ஆபாச வசவுகளுக்கும் நான் கவலைப்படவில்லை உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றை ஒன்றுதான் . எனக்கு அழைப்பு விடுவதற்கு  முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கி விட்டு அழையுங்கள், வீரமுள்ள அவர் புகைப்படத்தை வைத்துக் கொண்டே காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகமே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை நீங்கள் இழிவு செய்து விட்டீர்கள், இனியாவது திருந்துங்கள் என்றும் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்