நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. போதுமா? செய்தியாளர் சந்திப்பில் சீறிய சீமான்

Siva

வெள்ளி, 24 ஜனவரி 2025 (12:00 IST)
நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை, போதுமா? என கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து புகைப்படம் எடுத்ததாக சீமான் கூறிய நிலையில், அந்த புகைப்படம் வெட்டி ஒட்டப்பட்டது என அந்த புகைப்படத்தை எடிட் செய்தவரே சமீபத்தில் பேட்டி அளித்த நிலையில், பிரபாகரன்-சீமான் சந்திப்பு நடக்கவே இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தபோது, பிரபாகரன் சந்திப்பு குறித்த கேள்வி கேட்டனர். அப்போது, “நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை, போதுமா? இதை நம்புகிறீர்களா?” என ஆவேசத்துடன் கூறினார்.

மேலும், வீட்டில் உருட்டு  கட்டையுடன் நாம் தமிழர் கட்சியினர் கூடியதற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தது குறித்த கேள்விக்கு, “துப்பாக்கி வெடிகுண்டு வைத்திருக்கும் வழக்கு போடுங்கள்” என சீமான் பதிலளித்தார். அப்போது, “துப்பாக்கி வைத்திருந்தீர்களா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்காமல் வேகமாக சென்று விட்டார்.

கடந்த சில நாட்களாக சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். குறிப்பாக, பெரியார் குறித்து பேசியது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபாகரன் சந்திப்பும் பொய் என்று கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்