செல்லாத வாக்குகளான 310 தபால் வாக்குகள் - காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:40 IST)
உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாததால் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.
 
9 மாவட்டங்களில் 74 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பமாக தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாததால் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்