பொங்கல் முடிஞ்சது… சென்னைக்கு திரும்பனுமே!? – இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (08:57 IST)
பொங்கலுக்கு சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர் சென்ற நிலையில் மீண்டும் சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடந்த மூன்று நாட்களாக பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவ்வாறு இயக்கப்பட்ட 9,868 பேருந்துகளில் 4 லட்சத்து 84 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் சொந்த ஊர் சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப தமிழகம் முழுவதிலுமிருந்து 1,867 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர பிற ஊர்களுக்கு 3,300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்