பொங்கல் சிறப்புப் பணம் – ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் !

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (14:58 IST)
பொங்கல் சிறப்புப் பணமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபப்ட்ட 1000 ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகிறது.

வழக்கமாகப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகளில் வெல்லம், ஏலக்காய், முதிரி திராட்சை, அரிசி போன்றவை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் இலவசப் பொருட்களோடு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து இன்று சிறப்புப் பணம் வழங்கும் நிகழ்ச்சித் தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு காலை முதலே மக்கள் நியாய விலைக் கடைகளில் வந்து கூட்டமாகக் காத்திருக்கின்றனர்.

மேலும் இந்த ஆண்டு பிளாஸ்டிக் தடையினால் பரிசுப் பொருடகளை காகித உறைகளில் பார்சல் செய்யும்  பணிகள் நடைபெற்று வருவதால் உணவுப் பொருட்கள் வழங்குவதில் சிறிது தாமதம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்