பெட்ரோல் விலை குறைப்பு மகிழ்ச்சி; ஆனா தேர்தல்ல நாங்கதான்..! – திமுகவை புகழ்ந்த பொன்னார்!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:23 IST)
தமிழக அரசு பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைத்துள்ளது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களில் இந்தியாவில் பெட்டோல் விலை வேகமாக அதிகரித்து வந்த நிலையில் லிட்டர் ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தமிழக பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் “100 நாட்களில் திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் பல திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன். பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு பாராட்டப்பட வேண்டியது” என்று கூறியுள்ளார்.

அதேசமயம் “அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்; வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்