விஜய்யை அழைப்பது புலிக்கு பயந்து பூனையை தன் மீது படுக்க கூறுவது போன்றது: பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (09:01 IST)
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு வர விரும்பினால்,  எங்கள் கட்சிக்கு வரவிரும்பினால் அவருக்கென்று ஒரு இடம் உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவதே முதல்வர் பதவியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும். நிலையில் கமல் கட்சியில் எப்படி சேருவார்? என்ற லாஜிக்கே இல்லாமல் கமல் பதில் கூறியுள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, 'மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நடிகர் விஜய்க்கு தனது அமைப்பில் இடமுள்ளதாக கூறியிருப்பது புலிக்கு பயந்து தன் மீது படுக்குமாறு கூறுவது போன்றது என விமர்சித்துள்ளார்

கமல் கட்சி ஆரம்பித்து சுமார் பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு பெரிய நடிகர் கூட அவரது கட்சியில் சேரவில்லை. இந்த நிலையில் வேறு வழியில்லாமல் அழைப்பு விடுக்க ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்