விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டிய எடக்கு!

ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (13:10 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி  கன்னட சினிமாவில்  வில்லனாக நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த "அக்காடா" தமிழில் "எடக்கு" என டப்பிங் செய்யப்பட்டு அக்.26-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
 
அக்காடா கடந்த ஆகஸ்ட் மாதம் கன்னட சினிமாவில் வெளிவந்தது. இந்த படத்தை கன்னட ஜிகர்தண்டாவை இயக்கிய இயக்குநர் சிவா கணேஷ் தான் இயக்கினார்.
 
இப்படத்தில் விஷ்ணு வசந்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நாயனா நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் மாஸ் வில்லனாக நம்ம விஜய் சேதுபதி தனக்கே உரிய பாணியில் பட்டய கெளப்பிருப்பாரு. .தமிழில் இப்படம் அக்.26ஆம் தேதி வெளியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்