சாத்தான்குளம் போல சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம் – போலிஸாரால் தற்கொலை செய்துகொண்ட பெயிண்டர்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:11 IST)
சென்னை புழலில் வாடகை வீட்டை காலி செய்யுமாறு சொல்லி வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பெயிண்டர் ஒருவரை கொடூரமாக தாக்கியுள்ளார் புழல் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்.

கொரோனா காரணமாக பலரும் வேலையில்லாமல் வருமானத்துக்கு வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அடிமட்ட தினக்கூலியாக இருந்தவர்கள் பலர் உணவுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இது போலெ பெருநகரங்களில் கூலி வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். அதனால் அவர்களால் வாடகை கட்ட முடிவதில்லை. இதையடுத்து வாடகை வசூலிக்கக் கூடாது என்று அரசாங்கம் அறிவித்து இருந்தாலும் யாரும் அதை பின்பற்றுவதில்லை.

சென்னை புழலை அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டில், சீனிவாசன் என்ற பெயிண்டர் வாடகைக்கு குடி இருந்துள்ளார். ஆனால் மூன்று மாத காலமாக அவர் வாடகை கட்டாடத்தால் வீட்டு உரிமையாளர் புழல் காவல் நிலையத்தில் புகாரளிக்க, விசாரிக்க வந்த காவலர் சீனிவாசனை மனைவி மற்றும் குழந்தைகள் முன்னர் தாக்கியுள்ளார். இதனால் அவமானப்பட்ட பெயிண்டர் தற்கொலை செய்துகொள்ள தன் உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழ்ந்துள்ளார். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பென்ஸாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கு முன்னரே அவர் இதுபோல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்