நடிகை விஜயலட்சுமி புகார்: சீமானுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பிய போலீசார்..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:54 IST)
நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பாக விசாரணை செய்ய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகாததால் தற்போது இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்துள்ளனர். சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு சம்மன் அளிக்க சென்ற வளசரவாக்கம் போலீசார் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே முதல் முறை சம்மன் அனுப்பிய போது, சீமான் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்