சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது: நாம் தமிழர் கட்சியின் சீமான்

திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:53 IST)
சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக சனாதனம் குறித்த கருத்துக்களை திமுக மற்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திமுக பக்கம் சாய்ந்து வருவதாக சீமான் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் தற்போது திமுகவுக்கு மேலும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது என்று திமுக கருத்தையே தெரிவித்துள்ளார். 
 
சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது என்றும் உலகத்தில் உழவன் தான் உயர்ந்த குடி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உயர்சாதியில் இந்துக்கள் என்பதால் சனாதனத்தை எதிர்க்க மாட்டார்கள் என்றும் சனாதனத்தை ஏற்பார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்