ஊரடங்கில் மாட்டு சந்தை கேக்குதோ... அபராதம் போட்ட போலீஸார்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (10:22 IST)
கொரோனா தொற்றின் காரணமாக கோவை மாவட்டம் உள்பட 11 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொள்ளாச்சியில் மாட்டு சந்தை  இயங்கியதால் பரபரப்பு.  

 
கொரனோ தொற்றின் காரணமாக கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப் படாத நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக மளிகை கடைகள் .ஹோட்டல்கள். மருந்தகங்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாட்டுச் சந்தைக்குப் பெயர் பெற்ற பொள்ளாச்சியில் இன்று மாட்டு வியாபாரம் விற்பனை நடைபெற்றது. 
 
குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாடுகள், எருமைகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவை கொண்டுவரப்பட்டு தமிழகம் மற்றும் கேரளா வியாபாரிகளுக்கு மாட்டு விற்பனை  நடைபெற்று வந்தது, இதனால்  வியாபாரிகள் பெருமளவில் கூட்டம் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. 
 
இதனால் பொதுமக்களால் காவல்துறைதுணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அவர்களுக்கு தகவல் தரப்பட்டு காவல் துறையினர் விரைந்து வந்து அந்த இடத்தில் உள்ள லாரிகளுக்கு மாடுகளை கொண்டுவந்த வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர், மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினர் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் பொள்ளாச்சி மாட்டு சந்தை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்