மெரினாவில் 1000 போலீசார் குவிப்பு - சென்னையில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (15:27 IST)
மெரினா கடற்கரை நுழைவாயிலில் போராட்டம் நடத்தாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு சில இயக்கங்கள் திட்டமிட்டன. ஆனால், மெரினாவில் போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆயினும், நீதிமன்ற உத்தரவை மீறி இதை நடத்தியே தீருவோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன.
 
எனவே, மெரினா, சேப்பாக்கம் பகுதியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி மெரினாவில் நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை மெரினாவில் நடத்தினார். எனவே, போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்