தியாகத்தலைவி சின்னம்மாவை வரவேற்க காவல்துறை அனுமதி - டி.டி.வி!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (19:11 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. தற்போது பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். 
 
இதற்காக அமமுக கட்சி தலைவர் டிடிவி உட்பட சசிகலாவின் தொண்டர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சசிகலா வருகையை எண்ணி பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது என டிடிவி கூறியுள்ளார். 
 
மேலும் எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள் விடுத்துள்ள டி.டி.வி தினகரன் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க காவல்துறை அனுமதியும் பெற்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்