வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலின்போது பாமக தலைமையில் கூட்டணி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக கூறப்படும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு பாமக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் அதற்கான வழிமுறைகளை 2024 தேர்தலில் செயல்படுத்துவோம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். எனவே அதிமுக கூட்டணியை பாமக முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.