தமிழகத்தில் சுங்கக் கட்டணம் 60% குறையவுள்ளதாக தகவல்

சனி, 19 நவம்பர் 2022 (18:30 IST)
தமிழகத்தில் சுங்கக் கட்டணம் 60% குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

ALSO READ: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்கிறதா?

இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சுங்கக் கட்டணம் குறைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த  நிலையில், திமுக எம்பி வில்சன், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதி கட்காரியிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

எனவே, நாடு முழுவதும் உள்ளா தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரையிலும், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை 605 குறைக்க  உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்